• Apr 28 2025

ராஜமௌலியுடன் கைகோர்க்கும் தெலுங்கு நடிகர்.! 'மகாபாரதம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான 'பாகுபலி 2' படம் தற்போது எட்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றி அமைத்த ஒரு மாபெரும் படைப்பாக அமைந்தது. பல நூறு கோடிகள் வசூலித்த இந்தப் படம் தெலுங்கு சினிமாவை சர்வதேச அளவில் பெருமையடைய வைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது அடுத்த கனவு திட்டத்தை முன்னெடுத்துள்ளார். அது என்னவெனில் உலகப் புகழ்பெற்ற 'மகாபாரதம்' என்ற இதிகாசத்தை திரைப்படமாக உருவாக்குவதாகும்.


சமீபத்தில் நடைபெற்ற 'ஹிட் 3' பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜமௌலி, மகாபாரதம் திட்டம் குறித்து ரசிகர்களிடையே புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்போது அவர் கூறியதாவது, "மகாபாரதம் எனது வாழ்நாள் கனவு. தற்போது, என்னுடைய அப்பா அதன் ஸ்கிரிப்ட் எழுதும் பணியை ஆரம்பித்துவிட்டார்." என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இப்படத்தில் நானி நடிகராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நானி மற்றும் ராஜமௌலி ஏற்கனவே 'நான் ஈ' திரைப்படத்தில் இணைந்திருந்தனர். அந்தப் படத்தில் நானி மிகவும் சிறிய கதாப்பாத்திரத்தில் தோன்றியிருந்தாலும், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 'நான் ஈ' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவர்கள் இருவரும் தற்போது 'மகாபாரதம்' மூலம் மீண்டும் இணைகிறார்கள் என்பதே ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement