• Apr 27 2025

"இட்லி கடை " படத்தை விலைக்கு வேண்டிய முன்னணி டிஜிட்டல் நிறுவனம்...!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் எழுதி இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்தினை வொண்டர் பார் ,டவ்ன் pictures தயாரித்து வருகின்றது. இப் படத்தில் தனுஷுடன் இணைந்து நித்தியா மேனன் நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருவதுடன் ரெட் ஜெயண்ட் மூவி வழங்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் வெளியீட்டு தேதி பெரிய குழப்பத்தில் காணப்படுகின்றது.


அதாவது ஏப்ரல் 10 வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது இருப்பினும் அந்த நாளில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி வெளியாகவுள்ளமையினால் தனுஷ் படம் ஒதுங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் கூலி படம் வருவதால் செப்டெம்பர் 5 இந்த படத்தினை வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.


இந்த நிலையில் டிஜிட்டல் வியாபாரம் மிகவும் அரிதாகியுள்ள காலகட்டத்தில் இப் படத்தினை NETFLIX நிறுவனம் 45 கோடி கொடுத்து வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தொகை ராஜன் படத்தை விட 5 கோடி குறைவாக இருப்பதாகவும் இருப்பினும் இந்த இக்கட்டான சூழலிலும் இந்த தொகையே பெரிய விஷயம் என்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

Advertisement

Advertisement