தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் இறுதியாக கங்குவா, ரெட்ரோ திரைப்படங்கள் வெளியாகின. ஆனாலும் இந்த திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியன.
பிரபல நடிகரான சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றார். சமீபத்தில் இந்த அறக்கட்டளை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் இதன் மூலம் பயனடைந்த மாணவர்கள் வெற்றிநடை போட்டு வரிசையாக வந்திருந்தனர்.
அதிலும் குறிப்பாக 51 டாக்டர்கள் இந்த அறக்கட்டளை மூலம் உருவாகியுள்ளதாகவும், 6900க்கு மேற்பட்ட பட்டதாரிகள் அகரம் பவுண்டேஷன் மூலம் பயனடைந்து உள்ளதாகவும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்திருந்தனர். இதனால் சூர்யாவுக்கு பாராட்டு மேல் பாராட்டு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சூர்யா அரசியலிலும் களமிறங்க உள்ளார் என்ற தகவல் வைரலானது. மேலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அதிக அளவில் பேசப்பட்டது. ஆனாலும் இதனை சூர்யா தரப்பில் இருந்து மறுத்து விளக்கமும் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் அவருடைய தம்பி கார்த்தி ஆகியோர் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் சூர்யாவும் கார்த்தியும் கோட் சூட் போட்டு திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து உள்ளன.
Listen News!