சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தலைவலிக்குது என்று சொல்ல, மனோஜ் உடனே மருந்து எடுக்க போகின்றார். இதை பார்த்த விஜயா, என் பிள்ளையிடம் வேலை வாங்குவியா? என்று ரோகிணியை அழைத்து கண்டபடி திட்டுகின்றார். இதனால் நான் உன்னிடம் மருந்து கேட்டேனா? என்று மனோஜ்க்கு ரோகிணி பேசுகின்றார்.
இன்னொரு பக்கம் நீத்துவின் ரெஸ்டாரண்டில் சிட்டியின் அடியாட்கள் சரக்கு பாட்டலுடன் வந்து தகராறு பண்ணுகின்றார்கள். இதனால் ரவி முத்துவுக்கு போன் பண்ணி அழைக்கின்றார். இதன் போது முத்து அங்கு வந்து அவர்களை அடிக்க, தங்களை ஸ்ருதியின் அம்மா தான் அனுப்பியதாக உண்மையை போட்டு உடைக்கின்றார்கள்.
அதன் பின்பு வீட்டுக்கு வந்த ரவி, உங்க அம்மாவுக்கு வேற வேலை இல்லையா? என்னத்துக்கு இப்படி பண்றாங்க என்று ஸ்ருதிக்கு பேசுகின்றார். ஆனாலும் ஸ்ருதி இதனை பெரிதாக எடுக்காமல் இதனை நீ அம்மாவிடமே கேட்டு இருக்கலாமே என்று சொல்லுகின்றார் . மேலும் எனக்கு இப்படி ஒரு சிட்டிவேஷன் வந்தால் நான் உன்கிட்ட கேட்க மாட்டேன். உங்க அம்மாவுக்கு நானே போன் பண்ணி பேசுவேன் என்று சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து ஸ்ருதி தனது அம்மா வீட்டுக்கு சென்று உனக்கு வேறு வேலை இல்லையா? எதற்காக இப்படி பண்ணினா? ரவி என் கூட சண்டை போடுகிறார் என்று தனது அம்மாவுக்கு பேசுகின்றார்.
மறுபக்கம் மனோஜ் கடைக்கு புதிதாக ஒருவர் வருகின்றார். அங்கு மனோஜ் அதிக டிகிரி வாங்கி தான் இந்த இடத்தில் இருக்கின்றேன் என்று பெருமையாக பேசுகின்றார். இதை கேட்டவர் அப்படி என்றால் எங்களுடைய ஸ்கூலுக்கு சீப் கெஸ்ட் ஆக ஒரு நாளைக்கு வருமாறு சொல்லுகிறார். அதற்கு மனோஜும் சம்மதம் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!