• Aug 22 2025

ஒரு லட்சம் Chair -அ உடைச்சிட்டாங்க..! தவெக மாநாட்டில் தவிடுபொடியான பொருட்கள்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்  தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை   கடந்த ஆண்டு  அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார். அதன் பின்பு  தமது செயற் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றார். 

2024 ஆம் ஆண்டு  தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது .  இதில் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  ஆனாலும் அவர்களை சமாளிக்க கூடிய வகையில்  எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு  மதுரையில் நேற்றைய தினம் நடைபெற்றது. 600 ஏக்கர் பரப்பளவில்  இந்த மாநாடு   கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஐந்து லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


குறித்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள், ஸ்டாலின்,  சீமானை சீண்டிய  பேச்சுக்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும்  கமலஹாசனிடம் கூட விஜயின்  கருத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு பதில் எதற்கு என்று தனது ஸ்டைலில் தெரிவித்து சென்றார்.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு  நடைபெற்று முடிந்த நிலையில்  அங்கு கதிரைகள், செருப்புகள் என அலங்கோல விதமாக காட்சிகள் காணப்பட்டுள்ளன். குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருவதோடு, குறித்த மாநாட்டிற்கு பின்னர் ஒரு லட்சம்  கதிரைகள் உடைக்கப்பட்டு இருப்பதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement