மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் சிம்பு முதல்முறையாக இணைந்து நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘செக்க சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மணிரத்னம் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ளது. த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்ததற்காக சிம்பு வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்காக சிம்பு ரூ.40 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது திரையுலக வாழ்க்கையின் மிக உயர்ந்த சம்பளமாகும்.
கமலுக்கு நிகரான முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளதால் இப்படியொரு பெரிய தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ‘தக் லைஃப்’ வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில் இப்படம் வசூல் சாதனைகளிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!