இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் கலையை மக்களுக்கு உணர்த்திய படைப்புக்களுக்கு கௌரவமாக வழங்கப்படும்.
எனினும், 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில், பல முக்கியமான தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களும், ரசிகர்களும் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
சமூக பிரச்சனைகளை முன் வைத்து உருவாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றிபெற்ற விடுதலை - பாகம் 1, அநீதி, அயோத்தி, சித்தா, மற்றும் போர்த் தொழில் போன்ற படங்களுக்கு எந்தவொரு வகையிலும் தேசிய விருது கிடைக்காதது, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த படங்கள் அனைத்தும், தேசிய விருதுகளுக்குத் தகுதியானவை மட்டுமல்லாமல், முன்னதாகவே பல தரப்பு சினிமா விமர்சகர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட படங்களாக இருந்தன. ஆனால் இவை எந்தவொரு விதத்திலும் விருது பட்டியலில் இடம்பெறாமல் போனது, தமிழ் சினிமா சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!