தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தனது சமீபத்திய நடிப்பாற்றல், அழுத்தமான கதைகள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளால் ரசிகர்களிடம் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்பங்களுடன் தொடர்புடையதாக காணப்படும்.
அதுபோல, தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள "மதராஸி" திரைப்படம் பின்னணியில் வித்தியாசமான கதையைக் கொண்டுள்ளது.
அத்துடன், "மாவீரன்" படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே, "மதராஸி" திரைப்படத்தின் கதை கட்டமைக்கத் தொடங்கப்பட்டது. சமீபத்திய பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த படம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரால் பெரிய கனவுகளோடு தொடங்கப்பட்டது.
அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு இருந்த மார்க்கெட்டைப் பார்த்து தயாரிப்பாளர்களிடம் அவர் குறைந்த பட்ச சம்பளம் கொடுத்தால் போதும் என கூறியிருந்தார். ஆனால் தற்பொழுது வெளியான தகவல்களின் படி மதராஸி ரிலீசுக்கு பின் லாபத்தில் பங்கு கொடுத்தால் போதும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார் என சில சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!