தற்போது தென்னிந்திய திரையுலகில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குவனவாக பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் கதைகள் காணப்படுகின்றன. அத்துடன் அத்தகைய படங்கள் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றிகளைப் பெறத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில், ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான "லோகா" திரைப்படம், இந்த புதிய நிலைமையை உறுதி செய்துள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம், இப்போது வரை 96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெற்றி, 2009ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான "அருந்ததி" படத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் பெரும்பாலும் ஹீரோக்களின் படம் தான் மாபெரும் வெற்றியை பெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் மையமான படங்கள் தனி கதைகளாக உருவாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், "லோகா" ஒரு முக்கியமான மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!