• May 16 2025

டூப் போடுறவனுக்கும் உயிர்தானே இருக்கு..! கேப்டனின் தைரியத்தைப் புகழ்ந்த முருகதாஸ்..

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைமேடையிலும் அரசியல் வெளியிலும் உறுதியான குரலாக வலம் வந்தவர் 'கேப்டன்' விஜயகாந்த். அவருடைய வாரிசான சண்முக பாண்டியன் தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘படை தலைவன்’. இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வருகின்ற வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


சென்னையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில், திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏ.ஆர். முருகதாஸ், சசிக்குமார், கஸ்தூரி ராஜா, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை ஒளிர வைத்தனர்.

கேப்டன் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் முருகதாஸ் கதைத்திருந்தார். அவரின் உரை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதன்போது முருகதாஸ் கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்குநராக எடுத்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்தார்.


அதன்போது அவர் கூறியதாவது, "ஒருமுறை ஹெலிகாப்டர் ஷாட் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த காட்சிக்கு ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் 'டூப்' வைச்சு எடுக்கலாம்'ன்னு சொன்னாரு. ஆனால் கேப்டன் மறுத்து, 'நான் தான் நடிக்கிறேன். டூப் வேணாம். அண்ணிக்கிட்ட மட்டும் டூப்புன்னு சொல்லிடுங்க'ன்னு தைரியமா சொன்னார்." என்றார் முருகதாஸ்.

மேலும், " 'டூப் போடுறவனுக்கும் ஒரு உயிர்தானயா இருக்கு..! அவனுக்கு மட்டும் என்ன ரெண்டு உயிரா இருக்கு?'ன்னு கேட்டார். அந்த ஒற்றை வசனம்... எனக்கு அவர்மீது பெரிய மரியாதையை வளர்த்தது." என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement