• Jul 18 2025

"பன் பட்டர் ஜாம்" டிரைலர் வெளியானாது இன்று...! ரசிகர்களுக்கு ராஜுவின் காதல் டெலிவரி...!

Roshika / 3 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக பரபரப்பாக வென்ற ராஜு ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’. கடந்த காலத்தை ஒத்த கமெடியான காதல் கதையுடன், தற்போதைய ஜென்ஸி பார்வையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், ஜூலை 18ம் தேதி திரையிடப்படவுள்ளது.


காதலும், உறவுகளும் சமீப காலத்தில் வேகமாக மாறும் இயல்பை படம் எடுத்துக் காட்டுகிறது. இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள இப்படத்தில், ராஜுவுடன் ஜோ பட ஹீரோயின் பாவ்யா த்ரிகா மற்றும் ஆத்யா பிரசாத் இணைந்து நடித்துள்ளனர். காமெடி, காதல், கருத்து வேறுபாடுகள் என அனைத்தையும் கொண்டுள்ள டிரைலர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீனிக்ஸ் படத்தைத் தொடர்ந்து விஜய் டிவி நட்சத்திரம் ஒருவருடன் வெளியாகும் இப்படம், விஜய் ரசிகர்களிடமும், பிக் பாஸ் ரசிகர்களிடமும் தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


சமீபத்திய ஜூலை மாத தமிழ் படங்கள் பெரிய வசூலைப் பெற முடியாமல் திணறிய நிலையில், ராஜுவின் அறிமுகப்படமான ‘பன் பட்டர் ஜாம்’ ரசிகர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அவருக்கான பெரிய வெற்றியாக மாறும் என்று விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement