கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தனது தோழியின் கணவரை காதல் திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா.. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். திருமணத்திற்கு பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தனது பட வாய்ப்புக்களை இழந்தார். அதன் பின்பு கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்தாலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் நடித்த படங்களும் தோல்வியில் முடிந்தன.
திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் குடும்ப வாழ்க்கையில் இவருடைய கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் தனது திருமண புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார் ஹன்சிகா. இதனால் விவாகரத்து செய்தியை ரசிகர்களும் நம்பினர்.
எனினும் ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது வாழ்க்கை பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது சிரிப்பாக வருகிறது என எமோஜி ஒன்றை பகிர்ந்து இருந்தார். இது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்தது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு புகைப்படங்களில் கூட அவருடைய கணவர் இல்லை. இதனால் உண்மையாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!