• Jul 18 2025

சூரி என்ன பெரிய அழகனா..? தயாரிப்பாளர் கே. ராஜனின் அதிரடிக் கருத்து வைரல்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகத் தன் பயணத்தைத் தொடங்கிய நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக வெற்றிக் கொடியை நாட்டி வருகிறார். அவரது வளர்ச்சியைப் பாராட்டும் வகையில், மகேஸ்வரன் மகிமை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் அளித்த உரை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


தனது உரையில் தயாரிப்பாளர் கே. ராஜன், “சூரி என்ன பெரிய அழகனா? அவர் காமெடி நடிகர்தான். பரோட்டா தின்னிட்டு, காமெடி பண்ணிட்டு இருந்தவர் தான். ஆனால் தொடர்ந்து இப்ப 4,5 படங்களில் ஹீரோவாக நடிச்சுட்டு இருக்கான்?” எனத் தெரிவித்திருந்தார்.

கே. ராஜன் தொடர்ந்து, “சூரி நடிக்கிற படங்களில் கதை இருந்தது. குடும்பம் இருந்தது. கவர்ச்சியும் கொச்சையும் இல்ல. குரூப் டான்ஸ் கிடையாது. சினிமாவுக்குத் தேவையான உண்மையான உணர்வுகள் இருந்தது. அதனால் தான் மக்கள் ரசிச்சாங்க. அதனால் தான் அவருக்கு வெற்றி கிடைச்சது.” என்றார்.


'மகேஸ்வரன் மகிமை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது. அதில் ராஜனின் கூறிய உரை நிகழ்ச்சியின் ஹைலைட்டாக காணப்பட்டது. தற்பொழுது இந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement