• May 24 2025

ராதிகா ஏழரை நாட்டுச் சனி..! ஆதங்கத்தில் babloo..! அப்புடி என்னதான் ஆச்சு...

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாகவும் பின்னர் வில்லனாகவும்,பிரபலமானவர் நடிகர் Babloo பிரித்விராஜ். இவர் சமீபத்தில் பங்கேற்ற ஒரு விருது விழா நிகழ்வில் தனது வாழ்க்கையின் உண்மைக் கதைகளையும், தன்னுடைய மனக்கவலையையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். 


இந்நிகழ்வின் போது நிகழ்ந்த உரையாடல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. நிகழ்ச்சியின் போது நடுவர், " பிரித்விராஜைப் பாத்து இவரிடம் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதுவேறெதுவும் இல்ல வயது என்பது ஒரு number தான் என்ற விடயத்தை இவரிடமே கற்க வேண்டும்..!" என்றார். 

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய பிரித்விராஜ், தனது 50 வருட சினிமா பயணத்தை நினைவுகூர்ந்தார். “நான் சினிமாவில் 50 வருடமா இருக்கேன். அந்தக் காலத்தில் ஒரு நடிகனுக்கு வரவேண்டிய எல்லாத்  துயரங்களையும் சந்திச்சிருக்கேன். ஒரு கட்டத்தில, சினிமா என்ர தலை எழுத்தில இல்ல என்றே ஜோசிச்சிருக்கேன்..!" என்றார். அவரது இந்த வார்த்தைகள், நெஞ்சை நெகிழவைக்கும் விதமாக இருந்தது.


பிரித்விராஜ் தனது மன அழுத்தங்களைப் பற்றி கூறியபோது, “ஒரு நிலையில சினிமாவையே விட்டு விடலாம், என் வாழ்க்கையை give up பண்ணலாம் என்ற எண்ணம் வந்துச்சு. ஆனா அந்த situation-ல என்னை மீட்ட படம் தான் அனிமேல்!” என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் படம் தான் எனக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையையும், வாழ்க்கையையும்  கொடுத்தது என உணர்ச்சியுடன் கூறினார். இதனை அடுத்து மேடையில் தொகுப்பாளர், சில முக்கியமான புகைப்படங்களை திரையில் காட்டினார். தில், நடிகை ராதிகாவின் புகைப்படம் வந்தபோது, பிரித்விராஜ் சற்றே இடைநிறுத்தி, “இதைப்பற்றி கதைக்க வேண்டாம்... இது ஏழரை நாட்டு சனி மாதிரி… ஆனா அவங்களோட நடிச்சதில எனக்கு நிறைய அனுபவமும் கிடைச்சது.” என்றார்.


மேலும் “என் அப்பா ரொம்பவே stupid. அவர் அப்பாவா இருக்கவே தகுதியில்லாதவர். அதனால தான் நான் என்ர பிள்ளைக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கணும் என்ற கனவு கொண்டு வாழ்கிறேன்.” எனத் தெரிவித்தார். பிரித்விராஜின் இந்த உரை, சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உண்மையாக வாழ்க்கைப்  பிரச்சனைகளில் சிக்கிய அனைவருக்கும் ஒரு மூச்சுத் திணறல் இல்லாத பாதையைக் காட்டியுள்ளது.

Advertisement

Advertisement