தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாக மாறியுள்ளவர் தான் நடிகர் Babloo பிரித்விராஜ். அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கைப் பயணத்தை மிகவும் உணர்ச்சி பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அவரின் நேர்மையான வார்த்தைகள் மற்றும் அனுபவங்கள் என்பன வாசகர்களை நெகிழவைக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரித்விராஜ் பேட்டியின் ஆரம்பத்தில், “நான் சினிமாவில் 50 வருடங்களாக இருக்கின்றேன். எல்லாவிதமான போராட்டம் மற்றும் அவமானம் எல்லாம் பாத்தாச்சு.. காசுகள் எதுவும் இல்லாமல் வீட்டையும் விற்று என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது எனக்கு friend ஒருத்தன் தான் ஹெல்ப் பண்ணான்." என்று தெரிவித்திருந்தார்.
மேலும், “ அந்த friend வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கச் சொன்னான். அதுதான் நான் எடுத்த தப்பான decision. ஏனென்றால் ராதிகா சினிமாவின் ஒளவையார். ரொம்ப காலமாகவே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றவர். அவங்களுக்கு husbend-ஆ நடிக்கிறதென்பது என்னையும் வயதானவர் போலக் காட்டியது." என்றார் babloo.
அத்துடன், ஒரு ரசிகனே என்னிடம் நேரடியாக வந்து " இங்க பாருடா ராதிகாவோட நடிக்கும் பழைய காலத்து ஹீரோ என்று கூறினான். அது மிகவும் கவலையாக இருந்தது. அதனை அடுத்து நான் நடித்த எல்லாப் படங்களிலும் அப்பா கதாப்பாத்திரத்தில் தான் நடித்தேன். அத்தகைய சூழலில் விஜய் சேதுபதியுடன் நடித்த "ஏஸ்" படம் தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது." என்றார் பிரித்விராஜ்.
பேட்டியின் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் sixpack கலாச்சாரம் குறித்தும் பேசியிருந்தார். அதன்போது பிரித்விராஜ், “இப்ப எல்லாருமே sixpack வச்சிருக்காங்க. ஆனால் அதை தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக கொண்டு வந்தவர் யாருன்னு தெரியுமா? ரியாஸ் கான் தான்!" எனவும் தெரிவித்திருந்தார்.
Listen News!