தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி என்ற பெயருடன் பிரபலமாகிய நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்தார். அவர் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கடந்த வருடம் செப்டம்பரில் பிரிவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களின் விவாகரத்திற்கு பாடகி கெனிஷா காரணம் என பலரால் சர்ச்சை எழுந்தாலும் அவர் மற்றும் ரவி மோகன் இதனை மறுத்தனர். ஆனால் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் கைகோர்த்து வந்ததால் அவர்களின் உறவு நிலை தெளிவாகியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு தனது மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் "ஒரு வருடமாக என் மீது ஏற்கனவே கூறப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகம் உண்மை தெரிந்து கொண்டுள்ளது. என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம். சட்டப்படி விவாகரத்து இன்னும் நடைபெறவில்லை ரவி மோகன் மகன்களை தவிக்கவிட்டு சென்றதாகவும், அவர்களுடன் இணைந்து கட்டிய வீடு தற்போது பேங்க் மூலம் காலி செய்யப்பட்டது" என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
Listen News!