• Apr 28 2025

ரோகிணி தோழி வித்யாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கிட்டத்தட்ட பிரபலமாகி விட்டார்கள் என்பதும் குறிப்பாக முத்து -மீனா கேரக்டரில் நடிக்கும் வெற்றிச்செல்வன் - கோமதி பிரியா, மனோஜ் - ரோகிணி கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா மற்றும் சல்மா, ரவி - ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் பிரணவ் மோகன் - ப்ரீத்தா ரெட்டி உள்பட அனைவருமே பிரபலமாகி விட்டார்கள் என்றும் அவர்களது சமூக வலைதளங்களில் கூட ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் எப்போதாவது வரும் வகையில் நடிக்கும் நட்சத்திரங்கள் கூட பிரபலம் ஆகிவிட்டனர் என்பதும், அந்த வகையில் ரோகிணியின் தோழி வித்யா என்ற கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன் கூட தற்போது வெளியே எங்கே சென்றாலும் நீங்கள் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நன்றாக நடிக்கிறீர்கள் என்று பாராட்டுக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ருதி நாராயணனுக்கு தற்போது ஒரு கூடுதல் சந்தோஷம் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் அவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ’சிறகடிக்க ஆசை’ சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி நாராயணன் அடுத்ததாக முழுமையாக சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர் பெரிய திரை உலகில், சின்னத்திரை உலகில் மிகச்சிறந்த நடிகையாக உருவாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement