• Jul 18 2025

2018 இல் பாடல் வெளியிட ஆரம்பித்து விட்டேன் சாய் அபியங்கர்...! வைரல் ஆகும் வீடியோ..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் ஜோடியான  திப்பு மற்றும்  ஹரிணியின் மகன் தான் சாய் அபியங்கர். இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் "கட்சி சேர "என்னும் பாடலை பாடி இசையமைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . மேலும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்   தொடர்ந்து, ஆசை கூட என்னும் பாடலை வெளியிட்டார் . இந்த பாடலும் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும் பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார். இவர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள சூர்யா 45,பென்ஸ் எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்துள்ளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது நீங்க NEPO KID ஆ என்ற கேள்விக்கு சாய் அபியங்கரின் கூறிய பதில் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


அதாவது " சச்சின் சேர் பண்ண ஒரு ரொக்கார்டை அர்ச்சுன் டெண்டுக்கர் பிரதர் ரீச் பண்னும் என்று நினைப்பது நம்ம தப்பு என்று நினைக்கின்றேன்  என்று கூறினார் . மேலும் என்னுடைய அம்மா, அப்பா எப்போதும் என்னை வற்புத்தியது கிடையாது  " இவங்க கிட்ட  இப்படி பேசு ,இதனைப் பண்ணு. நான் உனக்காகத்தானே பேசுகின்றோம் ,நீ அவங்க கிட்ட போய் பாடிக்காட்டு இது எல்லாம் என்னுடய வாழ்வில் நடந்தது கிடையாது என்று கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கிகையில் "நான் 2018 இல் இருந்து பாடல் வெளியிட ஆரம்பித்துள்ளதாகவும் 2024இல் நிறைவேறியதாகவும் கூறினார் . ஆனால் அந்த நேரத்தை பயிற்சிக்காக பயன்படுத்தியதாகவும் கூறினார். இருந்தாலும் என்னை  நெப்போ கிட் என்று தான் அழைக்கின்றர்கள் என்று கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .




Advertisement

Advertisement