ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம்தான் மதராஸி.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கின்றார்.
இந்நிலையில் மதராஸி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்கும் வேளை மதராஸி திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்தியத் துணைத் தூதரகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
“மதராஸி” திரைப்படத்தின் படப்பிடிப்புக்களை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான செலவுத்தொகை இலங்கை ரூபாவில் 5.37 கோடியை செலுத்த தவறியமைக் காரணமாக இந்த முறைப்பாடாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மதராஸி திரைப்படம் வெளியாவதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Listen News!