2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் திரையுலகத்துக்கு பெருமை சேர்த்துக் கொண்ட ஒரு முக்கிய வெற்றி இசைத் துறையிலிருந்து வந்துள்ளது. தமிழ்த் திரைப்படங்களின் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், தனுஷ் நடிப்பில் வெளியான "வாத்தி" திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ளார்.
இந்த மகிழ்ச்சி செய்தி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரைப்படக் கலையின் மிக உயர்ந்த அங்கீகாரமான தேசிய விருது கிடைத்திருப்பது, ஜி.வி. பிரகாஷின் இசை பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
"வாத்தி" படம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியானது. கல்வி முக்கியத்துவம், சமூக நீதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜி.வி. பிரகாஷ், இதற்கு முன் 2015-ம் ஆண்டில் தேசிய விருதினை பெற்றிருந்தார். இப்போதும், தனது இசையின் மூலம் மீண்டும் தனது அங்கீகாரத்தை தக்கவைத்துள்ளார். இந்த வெற்றியின் பின், ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்போது, "2வது முறையாக எனக்கு தேசிய விருது கிடைத்ததால் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளேன். ரசிகர்கள் என் மீது வைத்த அன்பும் நம்பிக்கையும் எனது பயணத்திற்கு வெளிச்சத்தை தருகிறது. இந்த விருதை என்னுடைய ரசிகர்களுக்கு சர்ப்பிக்கிறேன். தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட படக்குழுவிற்கு மிக்க நன்றி." எனக் கூறியுள்ளார்.
Listen News!