தமிழ் சினிமாவில் சில கலைஞர்களுக்கு அவர்களுடைய தனித்துவமான பங்களிப்புக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்காமலே போயிருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர் தான் பாடலாசிரியர் சினேகன். தனது எழுத்துக்களில் காதல், உயிர், சோகம், சிந்தனை எனப் பல பரிமாணங்களை காட்டியதுடன் பல பாடல்களில் தனது கவிதை நயத்தை மின்னவைத்திருந்தார்.
2017ம் ஆண்டு பிக்பாஸ் சீசன்1ல் கலந்துகொண்ட பிறகு, சினேகன் ஒரு பாடலாசிரியரைக் கடந்து புதிய நபராக மக்கள் மனதில் பதிந்திருந்தார். அவரது எளிமையான வாழ்கை, நேர்மையாகப் பேசும் பாணி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் என அனைத்தும் மக்களைக் கவர்ந்தது. அதன் பிறகு, அரசியல், திருமணம், சினிமா, தொலைக்காட்சி எனப் பல தளங்களில் தன்னை பரவலாக காட்டி வருகின்றார்.
சில மாதங்களுக்கு முன்பு, சினேகனுக்கும் அவரது மனைவிக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். அந்த மகிழ்ச்சியை அவர் நேர்காணல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருந்தார். அத்துடன் மகள்களுக்கு அவர் வைத்த “காதல்” மற்றும் “கவிதை” போன்ற பெயர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன.
தனிப்பட்ட வாழ்கையை குறைந்த அளவில் வெளிப்படுத்தும் சினேகன், தனது மகள்களின் 100வது பிறந்த நாளை, மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடியுள்ளார். அந்த நாளில் இரு குழந்தைகளுக்கும் மனைவிக்கும் சேர்த்து 'கொலுசு' பரிசாக வழங்கியுள்ளார். தமிழர் பாரம்பரியத்தில் குழந்தைக்கு 100வது நாளில் கொலுசு அல்லது சில முக்கிய நினைவுப்பொருட்கள் வழங்குவது ஒரு அங்கீகாரமாகவே விளங்குகின்றது.
Listen News!