• Apr 26 2025

திரையரங்குகளைத் தகர்த்தெறியும் OTT தளங்கள்.! கோபத்தில் கொந்தளித்த சுப்பிரமணியம்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரைத்துறையில் தற்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் நடிகர் மாதவன் போன்ற நடிகர்கள் புதிய திரைப்படங்களை நேரடியாக OTT தளங்களில் வெளியிட முடிவெடுத்தது. மேலும் திரையரங்குகளின் எதிர்காலம் குறித்த கவலையும் தற்பொழுது எழுந்துள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளின் நலனுக்காகக் கடுமையாகப் போராடி வருகின்ற திரையரங்க சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இதுபற்றிய தனது கருத்தையும், சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, "நடிகர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளங்களில் வெளியிட ஆரம்பித்துவிட்டால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் குறையும். இதனால் திரையரங்குகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்றதுடன் திரைத்துறையின் அடிப்படை நிலை பாதிக்கப்படும்."எனவும் கூறியுள்ளார்.


மேலும், மாதவன் போன்ற பிரபலமான நடிகர்கள் நேரடி OTT ரிலீஸ் முடிவுகளை எடுத்து முன்மாதிரி காட்டினால், பிறரும் அதை பின்பற்ற வாய்ப்பு உள்ளது. இது முற்றிலும் திரையரங்குகள் அழிவிற்கு வழிவகுக்கும் அபாயகரமான நிலை. திரைத்துறை என்பது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்த துறை. இந்தப் பின்னணியில் நடந்து கொள்ளும் ஒவ்வொரு செயலும் மிகவும் முக்கியமானது" என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன். "முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் போன்றவர்கள் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டும். அவர்கள் படங்கள் தான் ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முதன்மை சக்தி. பெரிய ஹீரோக்கள் நேரடியாக வெளியிடும் படங்களே திரையரங்குகளை சிறப்பிக்க உதவுகின்றன." என்றார். மேலும், ரசிகர்கள் பெரும்பாலும் பெரிய திரையில் நடிகர்களைப் பார்ப்பதையே விரும்புகிறார்கள். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே மக்கள் கொண்டாடுவார்கள் எனவும் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement