• Aug 10 2025

ஜெட் வேகத்தில் பறக்கும் ‘கூலி’ பட பிஸ்னஸ்... – சன் பிக்சர்ஸ் கையில் மாபெரும் லாபம்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம், அதிரடியாக பிஸினஸ் செய்திருப்பது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘கூலி’ திரைப்படம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ரூ. 355 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதில் நடிகர்களின் சம்பளம் மட்டும் ரூ. 275 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது வந்துள்ள தகவலின்படி, ‘கூலி’ திரைப்படம் ரூ. 530 கோடிக்கு வணிக ரீதியில் (பிசினஸ்) செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு செலவை விட ரூ. 175 கோடி லாபம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ரிலீஸாவதற்கு முன்பே, கூலி படமானது பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டாகும் என உறுதியாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement