பல்வேறு படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அவரின் வருகையால் நிகழ்வு களைகட்டியது.
பத்திரிகையாளர்களுடன் நேருக்கு நேராக பேசும் வாய்ப்பு கிடைத்த போது, சிம்ரன் தனது தற்போதைய சினிமா பயணத்தைப் பற்றி மட்டுமின்றி, எதிர்கால கனவுகள் மற்றும் விருதுகளின் மீதான அவரது எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.
அந்த சந்திப்பின் போது, ஒரு பத்திரிகையாளர், “உங்களுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கா.?" என்று கேட்டிருந்தார். அதற்கு சிம்ரன்,“கண்டிப்பாக எனக்கும் தேசிய விருது வரும். தேசிய விருது வாங்குவதற்கு சிறந்த கதையில் நடிக்கவேண்டும். அப்படியான ஒரு கதை வந்தால், யாரும் விருது வாங்கலாம்.” என்று கூறியிருந்தார்.
Listen News!