• Jul 18 2025

ரிட் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்...!கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளத்தில்  திறந்தாலே வைரலாகி  வரும் விடயம் கமல்ஹாசன். தமிழில் இருந்து தான் கன்னடம் பிரிந்தது என்று கூறிய விடயம் பெரும்  சர்ச்சையாக வெடித்து இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தில்  வழக்கு  பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில்  வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. மேலும் இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.


தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது  "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார் . இந்த நிலையில் கர்நாடகா  மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக  வெடித்து இருந்தது . இந்நிலையில் அம்மாநில  முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புக்கள்,  கன்னட அமைப்புகள், கன்னட மொழியை கமல்ஹாசன் இழிவு படுத்தி  விட்டதாக கூறி பலர் தங்கள் கண்டனங்களை  தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனார் . 


தொடர்ந்து கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்று கூறி பலர்  பேராட்டங்களில் ஈடுப்பட்டனர் . மேலும்  கமல்  மன்னிப்பு கேட்காத நிலையில் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாகவில்லை. இந்த நிலையில் " தக் லைஃப்" திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்து ரிட் மனு படக்குழுவினரால் வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்தது. இதனை இன்று விசாரித்த உயர் நீதி மன்றம் கர்நாடகா மாநில அரசுற்கு ரிட் மனுவுக்கு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  


Advertisement

Advertisement