தமிழ் சினிமாவில் தொடர்ந்து அசத்தலாக நடித்து வரும் நடிகர் ஹர்ஷ் ரோஷன் இவர் “கோர்ட்” படத்தில் நடித்து பெரும் பாராட்டுகளை பெற்றவர். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் மனதில் பெரிதும் இடம் பிடித்தது. இவரின் திறமையை பாராட்டும் விதமாக திரையுலகின் பிரபல தம்பதிகள் சூர்யா மற்றும் ஜோதிகா, ஹர்ஷ் ரோஷனுக்கு ஒரு அற்புதமான பாராட்டு அளித்துள்ளனர்.
சூர்யா-ஜோதிகா தம்பதி தனது பாராட்டை தெரிவிப்பதற்காக ஹர்ஷ் ரோஷனுக்கு பூங்கொத்து அளித்து அவரின் கலைத்திறனை பாராட்டியுள்ளனர்.இந்த சந்திப்பு நிகழ்வின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்ஷ் ரோஷன், தனது நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். "சூர்யா மற்றும் ஜோதிகா என்கிற இரு பெரிய ஹீரோக்கள் எனக்கு நேரில் பூங்கொத்து அளித்து பாராட்டினார்கள். அது என் வாழ்க்கையின் ஒரு சிறந்த தருணமாக இருக்கிறது. அவர்களுடன் நேரடியாக சந்தித்து பேசுவது ஒரு பெரும் பாக்கியம் " என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
Listen News!