இந்திய சினிமாவில் நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். இவர் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ரீமேக் ரைட்ஸ் வாங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு எழுந்திருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு அறிவிப்பு ஒன்றினை பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பிலுள்ளார்கள். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன் எனப்பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது .
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் "பகவந்த் கேசரி " திரைப்படத்தின் ரீமேக் என சர்சைகள் எழுந்திருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது .
அதாவது ரீமேக் ரைட்ஸ் வாங்கியது உண்மைதான் ஆனால் அந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சியமைப்புகள் "ஜனநாயகன்" திரைப்படத்துடன் ஒத்து போவதாக இருக்கின்றமையால் சட்ட ரீதியான சிக்கல்களில் இருந்து தவிர்த்து கொள்வதற்காக "பகவந்த் கேசரி " ரீமேக் ரைட்ஸ் வாங்கியள்ளதாக படக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருக்கின்றனர்.
Listen News!