• Apr 27 2025

சிறகடிக்க ஆசை: வசமாக மாட்டிக்கொண்ட ஜீவா! போலீசிடம் சிக்கிக்கொண்ட மீனா! குழப்பத்தில் முத்து

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலின் அடுத்த எபிசோட்டுக்கான கதைகள்  என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ள  நிலையில் இதன் அடுத்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சுவாரசியமாக காட்டும் இந்த தொடரின் பழைய எபிசோட் பரபரப்பாக முடிந்திருந்த நிலையில் இதன் அடுத்த எபிசோடில் பல சுவாரசியமான விடயங்கள் நடந்துள்ளது.


அதில் ஜீவாவை முத்து காரில் ஏற்றி செல்கின்றார். அப்போது ஜீவா பார்லருக்கு போக வேண்டியுள்ளது என கூறுகின்றார். அப்போது முத்து நுங்கப்பாக்தில் எனக்கு தெரிந்த பார்லர் ஒன்று இருக்கிறது என கூறி ரோகிணியின் பார்லருக்கு அழைத்துவந்து விடுகின்றார்.ஜீவாவை பார்த்த ரோகிணி ரகசியமாக மனோஜை அழைக்கின்றார். பின்பு இருவரும் சேர்ந்து ஜீவாவை போலீஷிடம் ஒப்படைகின்றனர் அங்கு ஜீவா இவர்கள் பொய் சொல்கிறார்கள் என வாதிடுக்கின்றார். இதே சமயத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தியதாக சொல்லி மீனாவின் வண்டியை போலீஸ் எடுத்து செல்கின்றனர். மீனா முத்துக்கு போன் பண்ணி ஸ்டேஷனுக்கு வர சொல்லுகிறார். இவர்களும் மனோஜ் , ரோகிணி , ஜீவா இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்கே செல்கின்றனர். இவர்கள் சந்தித்தார்களா என்பது அடுத்த எபிசோட்டில் தெரிய வரும் 

Advertisement

Advertisement