ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும் வகையில், பிரபல இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி (James Foley) மறைவடைந்தார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் அவர் 71 வயதில் தற்பொழுது இயற்கையை எய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்த அவருக்கு மீட்பு கிடைக்கவில்லை.
ஜேம்ஸ் ஃபோலி, 1953ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி அமெரிக்காவில் பிறந்தவர். 1984ம் ஆண்டு வெளியான “Reckless” என்ற இளம் காதல் படத்தின் மூலம் ஹாலிவூட்டில் தனது இயக்க பயணத்தை தொடங்கினார். தனது முதல் படமே விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பின், பல்வேறு தரமான படங்களை இயக்கி, தன்னை ஒரு மாறுபட்ட இயக்குநராக மையப்படுத்தினார். குறிப்பாக 1992ல் வெளியான “Glengarry Glen Ross” திரைப்படம் அவரது இயக்கத் திறமையை வெளிப்படுத்திய திருப்புமுனை படம் என்றே கூறவேண்டும். இந்தப் படம் பிரபல புலிட்சர் விருது பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுடன், பல வட்டாரங்களிலிருந்து பாராட்டுக்களையும் பெற்றது.
இப்படங்கள் விமர்சன ரீதியில் பல கருத்துக்களைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் மிகுந்த வசூல் சாதனையைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஜேம்ஸ் ஃபோலி பல தொலைக்காட்சி தொடர்களுக்கும் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி கடந்த சில ஆண்டுகளாக மூளை புற்றுநோயால் (Brain Cancer) பாதிக்கப்பட்டிருந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பிறகும், நோயின் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தவகையில் அவரது குடும்பம், நண்பர்கள், சக இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த மறைவுச் செய்தியை மிகுந்த அதிர்ச்சியுடனும் சோகத்துடனும் தெரிவித்துள்ளனர்.
Listen News!