• May 01 2025

DJD போட்டியாளரின் வாழ்க்கையை மாற்றிய சந்தானம்..! நெகிழ்ச்சியில் உறைந்த நடுவர்கள்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

ஜீ தமிழின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' இதுவரை பல்வேறு அனுபவங்களை மக்களுக்காக வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள மாஸ் ஹீரோ ரவுண்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை ஹீரோ சந்தானம் கலந்திருக்கிறார். தனது நையாண்டி, கமெடியுடன் மட்டுமல்லாமல் மனதளவிலும் உற்சாகத்தையும் உறுதியையும் ஏற்படுத்தும் வார்த்தைகள் மூலம் அவர் நிகழ்ச்சியை அலங்கரித்துள்ளார்.


மாஸ் ஹீரோ ரவுண்டில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் ஸ்டைலில் energetic ஆன நடனங்களை ஆடினார்கள். அந்த நடனங்களைப் பார்த்த சந்தானம், தனது பாராட்டுகளை நேரடியாகவும், நகைச்சுவை கலந்தும் கூறியிருந்தார்.

அதன்போது சந்தானம், “ஏதாவது ஒரு விஷயம் கிடைத்தவுடன் பாருங்க ஓவரா ஆடுறான்… அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இங்க ‘ஓவரா ஆடினா தான் எல்லாமே கிடைக்குது..!" என்று அவர் கூறிய இந்த வரிகள், நடன மேடையில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


நிகழ்ச்சியின் இடையே, ஒரு போட்டியாளர் சந்தானத்திடம் தனது அண்மைய அனுபவத்தை பகிர்ந்திருந்தார். “சார், வெளியில உங்க கார் நிற்குறதைப் பார்த்தேன். அப்பதான் என் மனசுக்குள்ள தோணிச்சு, ஒருநாள் நானும் நிறைய சம்பாதிச்சு அந்த மாதிரி ஒரு கார் வாங்கணும்!” என்று கூறியிருந்தார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தானம் எந்த தயக்கமும் இல்லாமல், உடனே புன்னகையுடன், “அட அப்புடியா? நீ கண்டிப்பா வாங்குவ..! இப்பவே வா… என் கூட காரில ஒரு round போகலாம்.!" என்று தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் இந்நிகழ்ச்சி சந்தானத்தால் சிரிப்பு மட்டும் அல்ல, சிந்தனையும், நெகிழ்ச்சியும் கலந்த நிகழ்வாக காணப்பட்டது. அத்துடன் இந்தவாரம் ஜீ தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான சம்பவம் காத்திருக்கு என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement