• Jul 18 2025

பரியேறும் பெருமாளை தழுவி ஹிந்தியில் உயிர்த்தெழுந்த ‘DHADAK 2’! அதிரடியாக வெளியான ட்ரெய்லர்

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்ற திரைப்படம் "பரியேறும் பெருமாள்". மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதாநாயகனாக கதிர் நடித்த அந்த படம் சாதாரண காதல் கதையாக இல்லாமல், சாதி மற்றும் சமூக அடையாளக் கேள்விகளை சினிமாவில் கோபமில்லாமல் சொல்லிய ஒரு போராளியின் படம். 


இப்போது, அதே உணர்வுகளை ஹிந்தி திரையுலகிற்கு கொண்டு செல்லும் முயற்சியாக "DHADAK 2" உருவாகியுள்ளது. அந்தவகையில், Dhadak 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், "இது வெறும் ரீமேக் இல்லை… இது உணர்வுகளின் மறு பிறவி!" எனக் கூறி வருகிறார்கள்.


சித்தாந்த சதுர்வேதி, த்ரிப்தி திம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஷாசியா இக்பால் இயக்கியுள்ளார். இது ஆகஸ்ட் 1ம் தேதி தியட்டரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement