• Apr 26 2025

விஜய்க்குப் பெண்களைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை..! – வீரலட்சுமி அதிரடிக் கருத்து!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த விஜய், தற்பொழுது அரசியல் களத்தில் கால்பதித்து த.வெ.க என்ற கட்சியைத் தொடங்கி செயற்பட்டு வருகின்றார். அவரது அரசியல் யாத்திரை மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற நிலையில் சில எதிர்மறையான குரல்களும் தற்பொழுது பலமாக எழுந்து வருகின்றன.

வீரலட்சுமி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்நிகழ்வின் போது, “அரசியல் கூட்டத்தில் விஜய் தன்னை ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ எனக் கூறினார். ஆனால் அவர் அந்தப் பெயருக்குத் தகுதி வாய்ந்தவர் அல்ல” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


விஜய், தனது பேட்டியின் போது, “நான் மக்களின் சூப்பர் ஸ்டார்” எனக் கூறியுள்ளார். இக் கருத்து பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், சிலர் அவற்றைப் புகழ்ச்சி நாடகம் என்று கூறிவருகின்றனர். இதனை வீரலட்சுமி “பெண்கள் பாதுகாப்பு குறித்து இன்று பேசுபவர்கள், சில ஆண்டுகளுக்கு முன் நடித்த படங்களில் பெண்களைத் தவறாகக் காட்டியவர்கள்" என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜயை விமர்சித்த வீரலட்சுமி, கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் உரிமை மற்றும் சமூக போராட்டங்கள் போன்ற பிரச்சினைகளில் தைரியமாகக் கதைத்தவர். அந்தவகையில் வீரலட்சுமி தற்பொழுது கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement