தற்போது தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் பெயர் தளபதி விஜய். விஜயின் அரசியல் பிரவேசம், "த.வெ.க" என்கிற புதிய கட்சியின் உருவாக்கம் மற்றும் பொதுக் கூட்டங்கள், வாக்காளர்களிடையே அவருக்கு கிடைத்த வரவேற்பு என இவை அனைத்தும் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உயர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நடிகரும் சமூக செயற்பாட்டாளியுமான பிரகாஷ் ராஜ், விஜயின் அரசியல் பயணத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் தனது கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது விஜயின் அரசியல் குறித்து பிரகாஷ் ராஜ் தெளிவாகத் தனது பாணியில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதன் போது அவர் கூறியதாவது, “விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பிரபலமான இயக்குநர். அவர் தன் மகனை ஸ்டார் ஆக்குவதற்காக தன் முழு உழைப்பையும் பயன்படுத்தினார். விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால், அவர் புதியவர். அவருடன் அரசியல் குறித்து நான் எந்த ஒரு உரையாடலும் மேற்கொண்டதில்லை.” எனக் கூறியிருந்தார்.
மேலும் பிரகாஷ் ராஜ், தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல நடிகரும், கட்சித் தலைவருமான பவன் கல்யாணையும் குறிப்பிட்டு ஒப்பீடு செய்துள்ளார். அவர், “பவன் கல்யாணும் இப்படித் தான் அரசியலுக்கு வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக அவர் அரசியலில் இருக்கிறார். ஆனால் இன்று வரை ஒரு தெளிவான நிலைப்பாடோ, தீர்வுக்கமான திட்டமோ அவரிடம் காணப்படவில்லை.” என்றார்.
அதே போன்று தான் விஜயிடமும் தெளிவான பார்வை இல்லை. நம் நாட்டில் உள்ள மக்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றி இவர்களுக்கு ஆழமான புரிதல் இல்லை என வருத்தமாகத் தெரிவித்திருந்தார். இது தற்பொழுது விஜய் ரசிகர்கள் மத்தியில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!