• Apr 26 2025

பெண்கள் ஒவ்வொருவரும் ஆண்களைப் போல இருக்கணும் - விஷால் ஆவேசம்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே , சண்டக்கோழி , திமிரு போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். விஷால் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கதைத்த வீடியோ வைரலாகி வருகின்றது.


அதில்  " சினிமாவையும் சூதாட்டத்தையும் ஒரே நோக்கில் கூறுகின்றமை ரொம்ப வருத்தமாக இருக்குது  அதை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் என்றதுடன்  சினிமா துறையின் ஊடாக நாங்கள் இரு வரி கட்டுகின்றோம் அதனை குறைக்குமாறு மோடி ஐயாவிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார். அப்படி வரி கட்டுவதை குறைத்து தந்தால் நான் பஸ் புடிச்சு தன்னும் போய் finance minister க்கு நேரில் சென்று வாழ்த்துக்  கூறுவதாகவும்"  தெரிவித்துள்ளார்.

அத்துடன் சினிமா துறைக்கு நல்ல ஒரு பாதை அமைத்துக் கொடுத்தால் மிகவும் நன்றாக  இருக்கும் எனக் கூறியுள்ளார்.மேலும் பேட்டியாளர் ஒருவர் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு விஷால் பதில் கூறுகையில் ,பெண்கள்  பாடசாலைகளில் படித்து முடிப்பதை விட முதலில் self  defense கத்துக்கொள்ளுங்க என்றார்.

 மேலும்  " சில பொறுக்கிகள் யார் சொன்னாலும்  ஏன் அம்பாளே வந்து சொன்னாலும்  கேக்காமல்  போதையில் பெண்களிடம் தவறாக தான் நடந்து கொள்வார்கள். எனவே  பெண்கள் ஒவ்வொருவரும் பயந்து இருக்காது  ஆண்கள் மாதிரி  தைரியமாக இருக்க வேண்டும் " என்றார். 









Advertisement

Advertisement