• Sep 02 2025

அத மட்டும் செய்யக்கூடாது! பிஜிலி ரமேஷ் மரணம்! உடைந்து அழுத வி ஜே சித்து!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்பட நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். மாலை ஐந்து மணி அளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரபல யுடியூபர் வி ஜே சித்து வந்திருந்தார். இதைத்தொடர்ந்து பிஜிலி ரமேஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறினார். 


யூடியூப் சேனலின் பிராங்க் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ். அதைத்தொடர்ந்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 


பிஜிலி ரமேஷ் கடந்த மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து ஒருவாரத்திற்கு முன் வீடு திரும்பிய பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார். 


பிஜிலி ரமேஷூக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த வி ஜே சித்து, அவரின் உடலைப்பார்த்து கதறி அழுதார். சித்துவை பார்த்த பிஜிலியின் மனைவி, தம்பி குணமாய் வா ஹோட்டல் வச்சு தரனு சொன்னியே என்று கதறி அழுதார். இதைப்பார்த்த சித்து உடைந்து அழுதுக்கொண்டே  இருந்தார். மது அருந்துவது கூடாது என்றும் இவர் மறைவு தனக்கு மனவருத்தம் தருவதாகவும் கருத்து தெரிவித்தார். 


Advertisement

Advertisement