சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் கூலி. இந்த திரைப்படம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு சென்ற ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு இந்த படம் அதிகமாகவே பிடித்திருந்த போதும், கூலி திரைப்படம் அனைவரையுமே கவரவில்லை. இது தொடர்பில் கலவையான விமர்சனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
74 வயதைக் கடந்த ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து பணியாற்றி வருகின்றார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அவருடைய 171 வது படமான கூலி படத்தில் நடித்திருந்தார்.
கூலி திரைப்படத்தில் அவருடைய ஸ்டைல், எனர்ஜி, டயலாக், அவருடைய நடனம், சண்டை காட்சி என அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கின்றார் என படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர். அதேபோல் கூலி திரைப்படத்தில் அவருக்கு அடுத்ததாக சௌபின், நாகார்ஜுனவும் ஸ்கோர் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதைத் தவிர இந்த படத்தில் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்பது போலவே லோகேஷின் வழமையான கதைக்களம் அமைந்துள்ளது. அதாவது பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்டு லோகேஷ் கனகராஜ் ஸ்கிரீன் பிளே பண்ணி உள்ளார். இதனால் கலவையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் முதல் நாளில் மட்டும் இந்தியளவில் மொத்தமாக 65 கோடி வசூலித்திருக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!