• Aug 14 2025

“திரைப்படத்திலும் மனித பண்பிலும் முன்னிலை"..ரஜினிகாந்துக்கு சசிகலாவின் வாழ்த்து..!

luxshi / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை உற்சாகமாக கொண்டாடி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த வாய்ப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா, தனது எக்ஸ் பக்கத்தில் ரஜனிகாந்தின் படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அப் பதிவில் அவர்,

"திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து சாதனைப்படைத்துள்ள எனது அன்பு சகோதரர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் திரு.ரஜினிகாந்த் அவர்களது உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.

எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தனது அசாத்திய திறமையாலும், நடிப்பாலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழக மக்களின் உள்ளங்களை எந்நாளும் மகிழ்விக்க வேண்டும் எனவும், அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும் எல்லாம் வல்ல ஆண்டவனை மனதார வேண்டுகிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement