• Aug 14 2025

ரஜினியை பார்த்த தருணத்தை மறக்கவே மாட்டேன்... கண்ணீர் விட்டுக் கதறிய விக்னேஸ் சிவன்..!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் ஒளி பரப்பும் நட்சத்திரங்களில் ஒரு பேரொளியாய் நிலைத்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இவர், தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதை முன்னிட்டு, அவருக்கு திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.


இது ஒரு சாதாரண வாழ்த்து அல்ல. ரஜினிகாந்தை தனது முதல் முறை நேரில் சந்தித்த தருணத்தில், கண்ணீர் விட்டதாக அவர் பகிர்ந்துள்ள அனுபவம் இன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சமூகத்திற்கும், திரையுலகத்திற்கும் அவர் செய்த பங்களிப்புகள் குறித்து பேச வேண்டுமானால், ஒரு நூலாக எழுத வேண்டியதுதான். அவருடைய நடிப்பு, ஸ்டைல், மக்களுடன் கூடிய நெருக்கம் மற்றும் பாராட்டு இவை அனைத்தும் அவரை சூப்பர்ஸ்டார் என்ற உயரிய நிலைக்கு எடுத்துச் சென்றன.


அத்தகைய நடிகர் ரஜினிகாந்தின் 50வது சினிமா ஆண்டு விழாவை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியை சந்தித்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு, தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்," first time I met you , couldn’t stop tearing up! Thalaiva … ! Everyone in this industry and everyone who knows you loves you..!" என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement