இந்திய திரையுலகில் தனக்கென ஓர் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வருகின்ற ஆகஸ்ட் 15, 2025 அன்று திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்கிறார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவின் காலத்தை மீறிய நட்சத்திரமாக திகழ்கிறார்.
இந்நிலையில், அவரது 50வது சினிமா ஆண்டு விழாவை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இபிஎஸ் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதில் அவர், " திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ் சினிமாவின் ரஜினிகாந்திற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கூலி திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்." என்று கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!