• Aug 14 2025

கூலி வெற்றியுடன் அடுத்த படத்திற்கு தயாரான லோகேஷ்..! ஹீரோ யார் தெரியுமா..?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'கூலி' திரைப்படம் இன்று, ஆகஸ்ட் 14, 2025, உலகம் முழுவதும் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் முன்னரே ஹைபாக இருந்த நிலையில், வெளியான முதல் நாளிலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இணைந்திருந்தனர். 

படத்திற்கு இசையமைத்துள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணி ஏற்கனவே பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளதால், கூலி படத்தின் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தன. 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் ‘LCU’ என தனித்துவமான சினிமா ஸ்டைலை உருவாக்கியவர். ரஜினிகாந்துடன் அவர் இணைந்திருப்பது, தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய கட்டத்தை தொடங்கியதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய பதிலளிப்பு வந்திருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இன்று மதியம் திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"இந்த படம் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள். இது ஒரு திருப்தியான தருணம்" என்று கூறினார்.


மேலும், அவரது இயக்கத்தில் இப்போது வரை நடித்துள்ள முன்னணி நடிகர்களைப் பற்றி அவர் பேசுகையில், விஜய், கமல், ரஜினி ஆகியோரை இயக்கிய அனுபவம் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய நிலையாக இருப்பதாக தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஒருவர், "அஜித்துடன் எப்போது படம் இயக்குவீர்கள்?" என்று நேரடியாக கேட்டபோது, லோகேஷ் கனகராஜ் தயக்கமின்றி, "எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது கண்டிப்பாக பண்ணுவேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது" என்று கூறினார்.


இந்த பதில், அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் #AjithWithLokesh என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Advertisement

Advertisement