• Apr 27 2025

பிரியாணியை காட்டி விஜயாவை கவுத்த முத்து.. ஆனாலும் இப்படி கண் கலங்கிட்டாரே.!! சிறகடிக்க ஆசையில் இனி நிகழப்போவது இது தான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில்,  ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் முத்து பிரச்சனை செய்ததை தொடர்ந்து, ஸ்ருதியும் ரவியும் கோவத்தில் வீட்டுக்கு வராமல் இருக்கிறார்கள்.

ஆனாலும் இன்றைய தினம் இடம்பெற்ற எபிசோட்டின்  அடிப்படையில், ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வர வேண்டும் என முத்துவும் மீனாவும் அவர்களை வீட்டுக்கு வருமாறு தனித்தனியாக கதைக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் என் மகன் வீட்டுக்கு வராமல் என் வாயில பச்சை தண்ணி கூட படாது என விஜயா சொல்கிறார்.


இதனால் தனது அம்மாவை சாப்பிட வைப்பதற்காக டைனிங் டேபிளில் வாழையிலை போட்டு பிரியாணி போடுகிறார் முத்து.


மேலும் இந்த பிரியாணியில் என்ன ஸ்பெஷல் என்றால் நாம என்ன நினைச்சு சாப்பிட்டாலும் அது நடக்கும் என சொல்ல விஜயா வந்து சாப்பிடுகிறார்.

இதை தொடர்ந்து, ஒரு நாள் கூட அத்தை உங்களை சாப்பிட்டியா என்று கேட்டதில்லை. ஆனால் அவங்க ஒரு நேரம் பட்டினி இருக்கக் கூடாது என்று இவ்வளவு பண்றிங்களே என மீனா முத்துவிடம்  சொல்ல, அவங்க தான் எனக்கு முதல் வாய் சோறு ஊட்டி விட்டாங்க என முத்து எமோஷனலாக சொல்லுகிறார்.

இவ்வாறு அம்மா பாசத்திற்காக ஏங்கும் முத்துவிற்கு அம்மாவின் பாசம் வரமாக கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

Advertisement

Advertisement