சமீப காலமாக, தமிழ் தொலைக்காட்சி உலகில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விஜய் டீவி மீது ஒரு முக்கியமான மாற்றம் நிகழவுள்ளதாக சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இணையத்தில் பரவிய செய்தியின்படி, பிரபல தமிழ் சேனலான விஜய் டீவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை முடித்து, புதிய நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க கலர்ஸ் திட்டமிட்டுள்ளதாக பல ஊடகங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தகவல்களைப் பரப்பின.
இது விஜய் டீவி ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சிலர் “இனி பிரியங்கா, கோபிநாத் தொகுப்பாளராக இருக்க மாட்டார்கள்..!” எனவும், “விஜய் டீவி பிரபலங்களின் வேலை மாற்றப்படப் போகிறது” எனவும் பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்தனர்.
பிரியங்கா, விஜய் டீவியின் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தார். அதேபோல் கோபிநாத், சமூக விவாத நிகழ்ச்சியான ‘நீயா நானா’ மூலம் தமிழர்களின் சிந்தனைகளைத் தூண்டும் தனித்துவமான தொகுப்பாளராக காணப்பட்டார்.
இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு பிரபல ஆர்.ஜே. ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "விஜய் டீவி மூடப்படவோ, கலர்ஸ் நிறுவனத்திற்கு விற்பனையோ செய்யப்படவில்லை. இது பற்றி அதிகார பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை." என்றார்.
அதுமட்டுமின்றி, பிரியங்கா தேஷ்பாண்டே குறித்த தகவலுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "பிரியங்கா விஜய் டீவியை விட்டு விலகவில்லை. திருமணத்தை முடித்ததும், ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ளார். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு, மீண்டும் வழக்கம் போல் விஜய் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்." எனத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் விஜய் டீவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!