• May 02 2026

ராஜ்கிரண் போட்ட கண்டிஷனால் சாப்பிட முடியாமல் அழுதிருக்கேன்... நடிகை சங்கீதா உடைத்த ரகசியம்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை சங்கீதா சமீபத்தில் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது ஆரம்பகால சினிமா பயணத்தை நினைவுகூரும் போது, 'எல்லாமே ராசா தான்' படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “அந்த படத்தில் நான் நடிக்கும் போது, நான் பத்தாம் வகுப்பு முடித்திருந்தேன். ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டதும், ராஜ்கிரண் சார் வைத்த முதல் நிபந்தனை என்ன வென்றால், நான் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பது தான். வீட்டில் எவ்வளவு சொன்னாலும் சாப்பிடாத நான், அவருக்கு பயந்து சாப்பிட ஆரம்பித்தேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், “எனக்காக தனியாக டயட் பிளான் கொடுக்கப்பட்டது. தினமும் முட்டை, ஐஸ்க்ரீம், மலைப்பழம் போன்றவை சாப்பிடச் சொல்லுவார்கள். சாப்பாடு கேரியரில் வந்து சேரும். ஆனால் அதனை முழுமையாக சாப்பிட முடியாமல் பலமுறை அழுதிருக்கிறேன்,” என்றும் சங்கீதா கூறியுள்ளார்.

இந்த அனுபவம் அப்போது அவருக்கு கடினமாக இருந்தாலும், அது தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான மாற்றமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பழைய நினைவுகளை ரசிகர்கள் பெரிதும் ரசித்து, அவரின் நேர்மையான பகிர்வுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement