• May 02 2026

'பராசக்தி' பட வெற்றியால் ஸ்ரீலீலா எடுத்த அதிரடி முடிவு.! - இனி கிளாமர் கிடையாதா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்ரீலீலா, இன்று தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிஸியான இளம் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ‘சித்ரங்கடா’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் கன்னடத்தில் ‘கிஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.


சமீபத்தில் சிவகார்த்திகேயன் உடன் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்த அவர், அந்த படத்தின் வசூல் வெற்றியால் மேலும் பிரபலமடைந்தார். இளம் ரசிகர்கள் மத்தியில் அவரது வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ஸ்ரீலீலா தனது எதிர்கால ஆசைகள் குறித்து பகிர்ந்துள்ளார். “அழுத்தமான சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பக் கதையில் நடிக்க மிகவும் ஆசை. அது என் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்கொணரும்,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்வதே தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது கதாபாத்திரத் தேர்வில் புதுமையை நாடும் ஸ்ரீலீலா, எதிர்காலத்தில் மேலும் பல வித்தியாசமான மற்றும் சவாலான வேடங்களில் ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement