தமிழ் சினிமாவின் திரையரங்க கிளாசிக்காக வலம் வரும் நடிகர் அஜித்குமார் சினிமாவுக்கும் ரேஸிங் கேரியருக்கும் சம அளவு முக்கியத்துவம் தருபவர். தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
அந்த பேட்டியில் அஜித்குமார் கூறியுள்ளதாவது “FAST & FURIOUS, F1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால், நிச்சயம் நடிப்பேன். அந்த அளவுக்கு பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் ரேஸிங் படங்களில் பணியாற்றும் ஆசை எனக்கிருக்கும். உலக ரேஸிங் அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது அதை சினிமாவிலும் பயன்படுத்த விருப்பமாக இருக்கிறது” என்றார். அவரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!