• Jun 24 2026

அஜித் படம் பற்றிய கேள்விக்கு முற்றுப்புள்ளி? சிம்புவுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து வலைப்பேச்சு சேனலில் பேசப்பட்ட தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

அதில் பேசிய வலைப்பேச்சு குழுவினர், நீண்ட காலமாக அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் படம் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேட்டு வந்தாங்க. அந்த கேள்விக்கு  இன்று முற்றுப்புள்ளி விழப் போகுது. படம் டிராப் ஆகிடுச்சா என்ற சந்தேகத்துக்கு முடிவு கட்டும் வகையில், அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வந்திருக்கு என்று தெரிவித்தனர்.

மேலும், அஜித் எப்போதும் வியாழக்கிழமை சென்டிமென்டை பின்பற்றுவார். ஆனா இப்போ அந்த சென்டிமென்டை கொஞ்சம் ஒதுக்கி வச்சிருக்காரு போல. அதனால்தான் புதன்கிழமையிலேயே அறிவிப்பு வருது என்றும் அவர்கள் கூறினர்.


இதனிடையே, நடிகர் சிம்பு சமீபத்தில் தமிழக முதல்வரும் நடிகருமான விஜயை சந்தித்தது குறித்தும் அவர்கள் பேசினர். வழக்கமாக எல்லாரும் விஜயுடன் நின்று புகைப்படம் எடுப்பாங்க. ஆனால் சிம்புவோடு மட்டும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசியிருக்காரு. 'நீங்க ஏன் குறைவாக படங்கள் நடிக்கிறீங்க?' என்று விஜய் கேட்டாராம். அதோடு, 'இனிமேல் உங்க படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்தாலும் நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க' என்றும் தைரியம் கொடுத்தாராம்" என வலைப்பேச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ரஜினிகாந்தின் புதிய படம் குறித்தும் முக்கிய தகவல் பகிரப்பட்டது. "கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ரஜினி 173 படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு  இன்று தொடங்குகிறது. இது தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல் வந்திருக்கு.. பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, முதல் கட்டமாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன" என கூறினர்.

சூர்யா நடித்து வரும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்திற்கு 'சரவெடி' என்ற தலைப்பு பரிசீலனையில் இருப்பதாகவும், அதேசமயம் சூர்யாவின் 2டி நிறுவனத்திற்கு பதிலாக தற்போது 'லகரம் ஸ்டுடியோஸ்' என்ற புதிய நிறுவனம் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் பகிரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement