• Jun 24 2026

மோகன்லாலின் மகள் ஹீரோயினாக ஜொலிக்க தயாரா.? ‘துடக்கம்’ போஸ்டர் வைரல்...

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான மோகன்லாலின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய முகம் திரையுலகில் அறிமுகமாகவுள்ளது. 

ஏற்கனவே அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தற்போது மகள் விஸ்மயாவும் வெள்ளித்திரை பயணத்தை தொடங்கத் தயாராகியுள்ளார்.

அதன்படி விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ‘துடக்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘2018’ திரைப்படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. தனது மகளின் முதல் படத்தை சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ‘துடக்கம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் விஸ்மயாவின் தோற்றம் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக மகன் பிரணவ் மோகன்லால் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள நிலையில், விஸ்மயாவும் தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், வாரிசு நடிகை என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கென ஒரு பாதையை உருவாக்குவாரா என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

Advertisement

Advertisement