• Dec 25 2024

அன்னபூரணி அம்மாவுக்கு 3வது திருமணம்..! தன்னை அர்ப்பணித்த அந்த மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில், அடுத்தவர் கணவரோடு வாழ்ந்து வந்த விவகாரம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தவர் தான் அன்னபூரணி.

இதைத்தொடர்ந்து தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் எனக் கூறி வைரல் சாமி ஆனார் அன்னபூரணி அரசு அம்மா. அது மட்டுமின்றி பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி பல பிரச்சினைகளையும் தீர்த்து வருகின்றாராம்.

மக்களுக்கு இவர் பளபளக்கும் பட்டு சேலையில் அடுக்கடுக்காக நகைகளை போட்டு அருள்வாக்கு சொல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு சர்ச்சைக்குரிய சாமியாராக காணப்படுகிறார் அன்னபூரணி அம்மா.

d_i_a

மக்களும் இவருக்கு பாத பூஜை செய்து, மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, மலர் தூவி, தீபாராதனை காண்பித்து ஆசி பெற்று வருகின்றார்கள். தன்னை பார்க்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதோடு அவர்களுடைய குடும்பப் பிரச்சனை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அருள்வாக்கும் கூறி வருகின்றாராம்.


இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் 28ஆம் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அன்னபூரணி. மேலும் நவம்பர் 28- 2024  அன்றைய தினம் அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம்... அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணத்தினால் தனது பாதுகாப்பு கருதியும் சமூகத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்ய வேண்டியதால் தான் திருமணம் செய்து கொள்வதற்காக முடிவெடுத்துள்ளாராம்.

தனது முன்னாள் கணவரை திருமணம் செய்து கொண்ட அதே நாளில் ஆன்மீகத்திற்காக தன்னை அர்ப்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் விருப்பம் உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் வாங்கி செல்லுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement