சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜின்ட ஷோரூமில வேலை செய்யுற பொம்பிள ரோகிணியை கூப்பிட்டு தங்கட ஊரில இருந்து கொண்டுவந்த லேகியத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்த ரோகிணி அதுக்குள்ள வந்திருச்சா என்று ஆச்சரியமாக பார்க்கிறார். பின் அந்த பொம்பிள லேகியத்தை எப்புடி பாவிக்கணும் என்று ரோகிணிக்கு சொல்லுறார்.
இதனை அடுத்து ரோகிணி இதை சாப்பிட்டால் பிரச்சனை ஒன்னும் வராது தானே என்று கேட்கிறார். அதுக்கு அந்த பொம்பிள அப்புடி ஒன்னும் பிரச்சனை வராது என்று சொல்லுறார். பின் ரோகிணி வீட்ட வந்து இந்த லேகியத்தை பார்த்துக் கொண்டு இதை போட்டால் மனோஜ் என்னோட சந்தோசமாக இருப்பான் என்று கனவு காணுறார்.
இதனை அடுத்து மனோஜ் வீட்டிற்கு வந்த உடனே ரோகிணி இந்த லேகியத்தை பாலில் கலந்து கொடுக்கிறதுக்காக பால் குடிக்கப்போறீயா என்று கேட்கிறார். பின் ரோகிணி மீனா கிட்ட போய் பால் இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு மீனா பால் எதுவுமே இல்ல என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி பால் வாங்க கடைக்குப் போறார். அந்த நேரம் பார்த்து முத்து ரோகிணிட மகனை கூட்டிக் கொண்டு வீட்ட வாறார்.
அதைப் பார்த்த ரோகிணி ஷாக் ஆகுறார். பின் அண்ணாமலை அந்த பையனை பார்த்து எதுக்காக இவனை கூட்டிக் கொண்டு வந்தனீ என்று கேட்கிறார். அதுக்கு முத்து இவனோட பாட்டி ஹாஸ்பிடலில இருக்கிறார் அதுதான் கூட்டிக்கொண்டு வந்தனான் என்கிறார். பின் மீனா அந்தப் பையனை நாம பாத்துக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா கோபப்படுறார்.
இதனை அடுத்து ரோகிணியும் மனோஜ் கிட்ட அந்த பையன் பாவம் அவன் இங்கேயே இருக்கட்டும் ஆன்ட்டி கிட்ட சொல்லு என்கிறார். பின் விஜயா அந்த பையன் வீட்ட இருக்கிறதுக்கு சம்மதிக்கிறார். இதனை தொடர்ந்து ரோகிணி ஹாஸ்பிடலில போய் தன்ர அம்மாவை பார்த்து எதுக்காக கிரிஷை முத்து கூட அனுப்பிவிட்டனீ என்று கேட்கிறார். அதைக் கேட்ட ரோகிணி அம்மா எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு கவலையே இல்லையா என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!