• Dec 25 2024

பாலியல் தொல்லையால் முடிந்து போன பாவனாவின் வாழ்க்கை... யாருக்குமே தெரிந்திடாத உண்மைக்கதை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை பாவனாவை யாராலுமே எளிதில் மறக்க முடியாது. அந்தளவிற்கு ரொம்பவே அழகான ஒரு பொண்ணு. எல்லார்கிட்டேயும் அன்பாக இருப்பதோடு மட்டுமல்லாது சுட்டித்தனம் நிறைந்த பெண்ணாகவும் இவர் இருக்கின்றார். 


இவரின் நிஜப் பெயர் கார்த்திகா மேனன். ஜூன் மாதம் 6ஆம் தேதி 1986 இல் பிறந்தவர். இவர் தமிழ் நன்றாகப் பேசக்கூடிய ஒருவராவார். ஆனால் இவர் ஒரு மலையாளி ஆவார். கேரளாவில் திரிசூர் என்ற இடத்தில் பிறந்தவர். இவருக்கு ஜெயதேவ் என்ற ஒரு சகோதரன் இருக்கின்றார்.

பாவனாக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்ன வயதிலேயே வந்திருக்கின்றது. அதற்கான முக்கிய காரணம் இவருக்கு நடிகை அமலாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்பது தான். பாவனா தன்னுடைய அப்பாவின் மூலமாகவே சினிமாவில் நுழைந்திருக்கின்றார். ஏனெனில் இவரின் தந்தை சினிமாத் துறையை சார்ந்த ஒருவர் தான்.


இவரின் அப்பா பெயர் ஜி.பாலச்சந்திரன். அம்மா பெயர் புஷ்பா. பாவனா ரொம்பவே நன்றாக கவிதை எழுதக்கூடிய ஒருவராவார். அந்தவகையில் இவர் 4-ஆம் வகுப்பில் படிக்கும் போது பூனையை பற்றி எழுதிய ஒரு கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவர் 10ஆம் வகுப்புவரை கேரளாவில் ஹோலி பாமிலி ஸ்கூல் ஒன்றில் தான் படித்தார். இவர் லவ் பற்றி எப்போதுமே சிந்தித்தது கிடையாது. இவர் 2002 இல் 'நம்மல்' என்கிற படம் மூலமாகத் தான் சினிமாவில் நுழைந்தார். இது ஒரு மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த சந்தர்ப்பத்தில் தான் இவருக்கு தெலுங்கு, மற்றும் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்தவகையில் இவரின் முதல் தமிழ்ப் படம் 'சித்திரம் பேசுதடி'. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

லவ் பிடிக்காது என்று அடிக்கடி கூறி வந்த இவரின் திருமணமோ இறுதியில் காதலில் தான் முடிந்தது. அதாவது  கன்னட நடிகரான நவீன் என்பவரைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இறுதியில் இவர் பெங்களூரில் செட்டில் ஆகி விட்டார். மேலும் நவீன் கன்னடத்தில் பல படங்களை தயாரித்தும் இருக்கின்றார்.


இவர்கள் இருவரதும் 6வருடங்களாக டேட்டிங்கில் இருந்திருக்கின்றார்கள். 2018 இல் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர் கடந்த 6வருடங்களுக்கு முன்பாக ஒரு கிட்னாப் கேஸ் ஒன்றில் சிக்கியிருந்தார். அதாவது 2017 இல் இது இடம்பெற்றது. 

இவர் எப்போதும் போல சூட்டிங் போய்ட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் 4,5 பேர் கொண்டு குழுவினர் இவரைக் கடத்திச் சென்றனர். எப்போதும் வார டிரைவருக்குப் பதில் வேறொரு நபர் தானாம் அன்றைய தினம் வந்திருந்தார். அவர் அதனைக் கவனிக்கவேயில்லை. அப்படிப் போகும்போது தான் இவரை மிரட்டி தப்புத் தப்பாக புகைப்படம் எடுத்திருக்கின்றார்கள்.

பின்பு இது போலீஸ் கேஸாக மாறி ஒரு சில நபர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அந்த விசாரணையின் போது மலையாள நடிகர் திலீப் தான் கடத்த சொல்லியிருந்தார் எனக் கூறி இருந்தார்கள். இதற்கு காரணம் என்னவெனில் திலீப் நடிகை காவியா மாதவனை 2ஆம் தாரமாக கள்ளத்தனமாக திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த உண்மையை அவரின் முதல் மனைவியான மஞ்சு வாரியாருக்கு தெரியப்படுத்தியது பாவனா தானாம். இதனைத் தொடர்ந்து முதல் மனைவி விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டார்.

இந்தக் கோபத்தினால் தான் பாவனாவை ஏதாவது பண்ணனும் என்று 2013 இல் யோசிச்சு இறுதியில் 2017 இல் கடத்தி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து பாவனா கூறுகையில் இந்த ஒரு காரணத்தால் என் வாழ்க்கையே முடிஞ்சு போயிடிச்சு, இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்திருந்தார். அத்தோடு இந்த பாலியல் தொல்லை என் சினிமா வாழ்க்கையை நாசமாக்கிடுச்சு எனவும் கூறி இருந்தார்.

ஆனால் தற்போது இவர் அந்த மன உளைச்சல்களில் இருந்து வெளியே வந்து ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement